நடிகை நயன்தாரா தனது வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ளும்ஆவணப்படமான (Docu-drama) ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairytale) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த 2022, ஜூன் மாதம் 9ஆம் தேதிதிருமணமானது. இவர்களுடைய திருமணம் முடிவடைந்த நிலையிலேயே நெட்பிளிக்ஸின் இந்தஆவணப்படம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில்தான் நயன்தாரா தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில், நடிகர் தனுஷ் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
மூன்று பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சம் இதுதான்:
“நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, அதில் ‘நானும்ரௌடிதான்’ படத்தின் படப்பிடிப்பின்போது, தனிநபர் சாதனங்கள் மூலம் எடுக்கப்பட்ட வெறும் 3 விநாடி வீடியோ மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், அதற்காக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக” நயன்தாரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆவணப் படத்தில் திரைத்துறையைச் சேர்ந்த தனது நலம்விரும்பிகள் பலரும் பங்களித்துஇருப்பதாகவும் தன்னுடைய பல திரைப்படங்கள் குறித்த நினைவுகள் இடம்பெற்றுஇருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நயன்தாரா, தனது மிகச் சிறப்பான மற்றும் முக்கியத்திரைப்படமான ‘நானும் ரௌடிதான்’ இடம்பெறாதது தனக்கு வருத்தமளிப்பதாகக்குறிப்பிட்டுள்ளார்.
ஆவணப் படத்தின் டிரெய்லரில், நயன்தாராவுடன் பணியாற்றிய இயக்குநர் அட்லி, நடிகை ராதிகா, நடிகர் ராணா டகுபதி, நாகார்ஜூனா, இயக்குநர் விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் நயன்தாராகுறித்துப் பேசியுள்ளதைப் பார்க்க முடிகிறது.
மேலும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் காதல், திருமணம் குறித்துப்பகிர்ந்துள்ளனர். அவருடைய முக்கிய திரைப்படங்களின் காட்சிகள், பாடல்கள்கூட ஆங்காங்கேபயன்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னும் தனுஷிடமிருந்து தடையில்லா சான்று பெறமுடியாததாலும், ‘நானும் ரௌடிதான்‘ படத்தின் பாடல்கள், காட்சிகள், புகைப்படங்களைக்கூடபயன்படுத்த அனுமதி தராத காரணத்தாலும், ஆவணப்படத்தை மீண்டும் படத்தொகுப்பு செய்து, தற்போதுள்ள வடிவத்திற்குக் கொண்டு வந்திருப்பதாக நயன்தாரா தனது அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தின் பாடல் வரிகளைக்கூட பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படாதது, தன் இதயத்தைநொறுக்குவதாக நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
“படப்பிடிப்பில் இருப்பவர்களின் சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் அதிகாரம்கொண்டவரா தயாரிப்பாளர்?” என்றும் நயன்தாரா கேள்வியெழுப்பியுள்ளார்.
அதோடு, “தனுஷின் நோட்டீஸுக்கு சட்ட ரீதியாக பதிலளிப்போம்” என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் இந்த அறிக்கை வெளியான உடனேயே, அனுபமா பரமேஸ்வரன், அஞ்சு குரியன், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட மற்ற நடிகைகள் சிலரும் நயன்தாராவின் பதிவுக்கு ‘லைக்’ செய்துள்ளனர்.
குறிப்பாக, நடிகை பார்வதி அந்த அறிக்கையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்பகிர்ந்துள்ளார்.
“தொழில் மற்றும் பணரீதியாக இல்லாமல், தனிப்பட்ட ரீதியில் தனுஷ் இதைச் செய்திருப்பதாக” நயன்தாரா அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, ஆடியோ வெளியீட்டு விழாவொன்றில் தனுஷ் பேசிய வீடியோவை பகிர்ந்து‘வாழுங்க, வாழ விடுங்க‘ என தனுஷ் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸையும் இன்ஸ்டாகிராமில்பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன்.