சென்னை : நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான வருடாந்திர கால அட்டவணையை என்டிஏ (National Testing Agency) வெளியிட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ. – National Testing Agency) மூலமாக உயர்கல்வி படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ. ஆகிய பல்வேறு முக்கிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த அட்டவணையை என்.டி.ஏ (NTA) வெளியிட்டுள்ளது.
பொறியியல், மருத்துவம் ;
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு முதல்கட்டமாக ஜனவரி 24 முதல் 31ந் தேதி வரையும், 2ஆம் கட்டமாக ஏப்ரல் 6 முதல் 12ந் தேதி வரையும், எம்.பி.பி.எஸ்., உட்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு மே 7-ம் தேதியும் நடைபெற உள்ளது.
க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ :
இதுதவிர மத்திய பல்கலைக் கழகங்களில் உள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) மே மாதம் 21ந் தேதி முதல் 31ந் தேதி வரையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்) ஏ.ஐ.இ.இ.ஏ. நுழைவுத் தேர்வு மே 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.
கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று என்டிஏ (NTA) தெரிவித்துள்ளது.