அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 (Amazon Great Summer Sale 2024) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அட்டகாசமான சாம்சங் 5ஜி போனும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது அமேசானில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அட்டகாசமான சாம்சங் போனை தற்போது ரூ.9,499 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M14 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போன். அதேபோல் 1080 x 2408 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
தரமான ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330 ) சிப்செட் உடன் Mali G68 GPU ஆதரவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
4ஜி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் கேமரா வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். 5ஜி, புளூடூத் 5.2, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்ப மிகவும் அருமையாக உள்ளது.
6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்.