அமெரிக்காவில் இருக்கும் இந்திய டெக் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் பிற துறையில் பணியாற்றும் என்ஆர்ஐ-களுக்கு அமெரிக்க அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் குடியுரிமை சேவைகளை வெளிநாட்டவர்களுக்கு எளிதாக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக விசா அப்பாயின்மென்ட் அளிப்பது முதல் பல சேவைகளில் அதிகப்படியான தளர்வுகளை அளித்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கான ஹெச்1பி விசா ரினிவல் பணியை அவர்களது சொந்த நாட்டில் செய்யும் நடைமுறையை தளர்த்தி அமெரிக்காவிற்குள்ளேயே ரினிவல் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. அதாவது அமெரிக்காவில் இருக்கும் ஒரு இந்தியரின் ஹெச்1பி விசா காலம் முடியும் பட்சத்தில் அவர் இந்தியாவுக்கு வந்து, விசா ரினிவல் செய்ய வேண்டும்.
இந்த நிலையை மாற்றும் விதமாக டிசம்பர் மாதம் முதல் ஒரு சோதனை திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது, இத்திட்டத்தின் கீழ் ஹெச்1பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில பிரிவில் அமெரிக்காவிலேயே விசா-வை ரினிவல் செய்யும் நடைமுறையை கொண்டு வர உள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும் டிசம்பர் மாதம் முதல் இத்திட்டத்தின் சோதனையை துவங்க உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசின் விசா சேவை பிரிவின் துணை உதவி செயலாளரான ஜூலி ஸ்ட்ஃபெட் கூறுகையில் இந்தியாவில் விசா அப்பாயின்மென்ட் பெற 3 மாதம் முதல் 1 வருடம் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்தியாவை நாங்கள் இந்த கண்ணோட்டத்தில் பார்க்க விருபம்வில்லை, இந்த நிலையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்நாட்டு விசா ரினிவல் திட்டத்தின் சோதனை முறையை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். பட்டாயா போறோம் பட்டைய கிளப்புறோம்.. இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. தாய்லாந்து மெகா அறிவிப்பு..!! இந்த திட்டம் இந்தியர்களுக்கு பயனளிப்பது மட்டும் அல்லாமல் விசா ரினிவல்-க்காக இந்தியா திரும்பி செல்லவோ அல்லது விசா அப்பாயின்மென்ட் பெறவோ தேவை இருக்காது என ஜூலி ஸ்ட்ஃபெட் தெரிவித்தார். இத்திட்டம் மூலம் விசா ரினிவல் பணிகள் வேகப்படுத்துவதோடு தாமதத்தை மொத்தமாக குறைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அதிகப்படியான இந்தியர்களை அமெரிக்கா தக்கவைக்க உள்ளது எனவும் தெரிவித்தார். அமெரிக்க அரசு 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த ஒரு சேவை தற்போது மீண்டும் நடைமுறைக்குக் வர உள்ளது.