தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க மழை பெய்யாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஆகஸ்ட் 26) முதல் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், ஓரிரு இடங்களில் சாரல் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் வரும் 29ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிராலியால், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.