தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். வேறொருவர் பெயரில் உள்ள வாகனத்தில் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டப்படக்கூடாது. முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் 500 ரூபாய், இரண்டாவது முறை 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 2 இன்று முதல் அமலுக்கு வருகின்றன.