எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரான்ட், ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு புதிய நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி பயனர்கள் எவ்வித முன்பணமும் செலுத்தாமல் தனது RV400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வாங்க முடியும். இதற்கான மாத தவணை ரூ. 4 ஆயிரத்து 444 ஆகும்.
வாடிக்கையாளர்கள் தங்களது வருமான சான்று, ஸ்டாம்ப் டியூட்டி அல்லது பிராசஸிங் கட்டணம் என எதுவும் செலுத்தாமல், டிஜிட்டல் முறையில் இந்த சலுகையை பெற முடியும். இதுபற்றிய முழு விவரங்கள் அந்நிறுவன விற்பனை மையங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று ரெவோல்ட் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதன் மூலம் ரெவோல்ட் நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கிறது.
====
Advance, Electric Motorcycle, Sale, Revolt Motors, RV400, முன்பணம், எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள், விற்பனை, ரெவோல்ட் மோட்டார்ஸ், ஆர்வி400