ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 100 யூனிட் வரை இலவசம். அடுத்த ஒவ்வொரு 100 யூனிட்டுக்கு வெவ்வேறு மாதிரியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஒரே வீட்டில் 2 மீட்டர்கள் பொருத்துவதன் மூலம் இந்த மானியம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய இணைப்பு கொண்ட வீடுகள் 15 நாட்களுக்குள் ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.