தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையிலும், இணையதளம் வாயிலாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்த முற்படும்போது பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நேரடியாக செலுத்தும் போது சில்லறை பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்று. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்போது புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் “மகிழ்ச்சியான செய்தி வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம்!
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது.
பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் செய்தி வசதி அறிமுகம்.
பாதுகாப்பு குறிப்பு:🔒வாட்ஸ்அப் செய்தி TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு, எண் 94987 94987 உறுதி செய்யவும்” என விடப்பட்டுள்ளது. இனி நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத்தை சிரமமின்றி வாட்ஸ்ஆப் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.