ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்ரா ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். 35 வயதான இவர் 15 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீசல் ஆட்டோ வைத்திருந்த இவர் பிறகு தினமும் 400 ரூபாய் செலவாவதை கருத்தில் கொண்டு ஒன்றரை வருடத்திற்கு முன்பு எலக்ட்ரிக் ஆட்டோவுக்கு மாறினார். ஆனால் அதிலும் குறைந்த மைலேஜ் சார்ஜ் பிரச்சனை போன்றவை இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது 11 வயது மகன் எலக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றலாமே என அற்புதமான யோசனை ஒன்றை கூறியுள்ளார். இந்த யோசனையை உடனே செயல்படுத்திய ஸ்ரீகாந்த் பட்ராவுக்கு இப்போது தினசரி வருமானமாக 1500 ரூபாய் கிடைக்கிறது எனக் கூறியுள்ளார்.