ஆதித்தனார் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி கடந்த 30 ஆண்டுகளாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படுகிறது.
இங்கு பயிற்சி பெற்ற பலர் வங்கி தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், சிவில் சர்வீசஸ் தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
சிவந்தி அகாடமி அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் ஜூனியர் அசோசியேட்ஸ் (கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ்) பதவிக்கான தேர்வினை ஆண்டு தோறும் நடத்துகிறது.
தற்போது 2024-25-ம் ஆண்டிற்கான ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளில் சுமார் 14,191 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வினை எழுத விரும்புபவர்கள் https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் வருகிற 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் (ஓ.சி.) 20 வயது முதல் 28 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 31 வயது வரையிலும், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம்.
இந்த தேர்வானது முதல் நிலை தேர்வு (பிரீலிமினரி எக்ஸாமினேஷன்) மற்றும் முதன்மை தேர்வு (மெயின் எக்ஸாமினேஷன்) என 2 நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வுகள் கணினி அடிப்படையில் நடைபெறும்.
முதல் நிலை தேர்வில் ஆங்கில மொழி, எண்ணியல் திறன் மற்றும் பகுத்தறிவு ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 100 கொள்குறிவகை வினாக்கள் கேட்கப்படும். 1 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
முதன்மை தேர்வில் பொது ஆங்கிலம், அளவுசார் திறன், பகுத்தறிவு திறன் மற்றும் கணினி திறன், பொது/நிதி விழிப்புணர்வு ஆகிய பாடங்களில் இருந்து 200 கொள்குறி வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் இந்த தேர்வு நடைபெறும். இந்த தேர்வுகளின் வினாக்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெறும். இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் தினமும் மாலை நேர ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இந்த பயிற்சி வகுப்பானது அனுபவமிக்க வல்லுனர்களால் வருகிற 6-ந் தேதி தொடங்கி மொத்தம் 45 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இதில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,500 ஆகும். பயிற்சி வகுப்புகளுக்கான குறிப்பேடுகள் சாப்ட் காப்பியாக வழங்கப்படும்.
பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகும். இதில் சேர விரும்புபவர்கள் பயிற்சி கட்டணத்தை வங்கி வரைவோலையாக (கனரா வங்கி, ஐ.ஓ.பி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.
அல்லது சிவந்தி அகாடமி இணையதளமான https://sivanthiacademy.org மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம். அதன் பின்னர் பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு sa@aei.edu.in அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. பயிற்சியின் இயக்குனராக முனைவர் டி.பென்னட் செயல்படுவார்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா தெரிவித்துள்ளார்.