அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் வேலை செய்ய அறிய வாய்ப்பு.

கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு படித்தவர்கள், எழுத படிக்க தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 03.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்குப்பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வந்து கேட்டுத் தெரிந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருக்கோயில் இணையத்தளத்தில் (www.hrce.tn.gov.in மற்றும் https://perurpatteeswarar.hrce.tn.gov.in)-ல் தெரிந்து கொள்ளலாம்.