ஒரு கதவு மூடினால் என்ன… மறு கதவு திறக்காமலா போய்விடும்..! ரோஷ்னி ஹரிப்ரியன்

ரோஷ்னி ஹரிப்ரியன்

மாடலாக இருந்து நடிகையாக மாறி சின்னத்திரையை கலக்கி கொண்டிருப்பவர் ரோஷ்னி ஹரிப்ரியன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ மெகாத் தொடரில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடரில் இருந்து விலகினார்.

இந்த தொடரில் இருந்து விலகிய பிறகு வேறெந்த புதிய தொடரிலாவது என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி தொடரில் போட்டியாளராக களமிறங்கினார்.

சர்வதேச உணவு வகைகளில் தனது நிபுணதுவத்தால் நடுவர்களையும், ரசிகர்களையும் கவர்ந்ததையடுத்து டைட்டிலை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சீசனில் அதிகபட்சமாக எலிமினேஷன் சுற்றுகளை எதிர்கொண்ட போட்டியாளரான இவருக்கும், முத்துகுமாருக்கும் இடையே ஏற்பட்ட கடும் சண்டையால், இவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே எலிமினேட்டாகி சென்றுவிட்ட நிலையிலும், பிரபல தமிழ் பத்திரிகை ஒன்று இந்த ஆண்டுக்கான ‘She’ விருதினை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

ஒரு கதவு மூடினால் என்ன மறு கதவு திறக்காமலா போய்விடும் என்பது இதுதானோ.

‘She’ விருது பெற்ற புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ரோஷ்னி ஹரிப்ரியன், விருது வாங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 101K பிளஸ் ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள் என்றால் சும்மாவா!