ஆடி பிறப்பு தொடங்கி ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் ஆடிப்பட்டம் விதைக்கின்ற காலமாக ஆடி மாதம் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்கள் கழனிகளில் விதைகளைத் தூவி புதிய பயிரிடும் இந்த காலத்திற்கு தனி விசேஷங்கள் உண்டு . ஆடிப்பெருக்கு தினத்தில் பெண்கள் விரதம் இருந்து ஆற்றை வழிபட்டு வாழை மட்டையில் விளக்கேற்றி நீரில் விடுவார்கள். புதுமணப் பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றி புதுத் தாலிக் கயிறு அணிவார்கள்.தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டில் இருந்தப்படியே ஆடிபெருக்குக்கு வழிப்படலாம்
வீட்டில் இருக்கும் பூஜை அறையில் காப்பரிசி செய்து வைத்து கும்மிடுங்கள். மஞ்சள் கயிறை முடித்து வைத்தும் வழிப்படலாம்.
காப்பரிசி முக்கிய பூஜைகளிலும், பிரதோஷத்தில் நந்திக்கும், பொங்கல் விழாக்களில் படையலிலும், பெண்கள் வளைக்காப்பு விழாவிலும், ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்றும் மிக விசேஷமாக நிவேதனமாக வைக்கப்படுகிறது. இதை அன்றைய நாளில் சாப்பிடுபவர்களுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம் ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் இந்த தினத்தில் விரதம் இருந்து மகா லட்சுமியை வழிபட்டால் திருமணம் கை கூடி வரும். ஆடி 18ல் விரதமிருந்து வழிபட்டல் குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது.