ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ‘அமோரி’ என்ற இடத்தில் இருந்து தொடங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி மாலை 6.18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் வடகிழக்கு பகுதிகளான ‘ஹொக்கைடோ’, ‘அமோரி’ மற்றும் ‘இவாட்’ ஆகிய பகுதிகளைத் தாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டுத் தகவல்படி ரிக்டர் அளவில் 6.1 பதிவாகியுள்ளது. மேலும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேசிய நில அதிர்வுக்கான மையம், ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சேதம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.