15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரனேஷ்!

சர்வதேச மாஸ்டர் அந்தஸ்திலிருந்து, இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் உயர்ந்திருக்கிறார்.

தமிழகத்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ். தனது 5 வயது முதல் செஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் குவித்துள்ளார். காமன்வெல்த் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பிரனேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில், 9 போட்டிகளில் 8 புள்ளிகளை பெற்றுள்ளார்.

5 வயதில் ஆரம்பித்த அவரது விளையாட்டுப் பயணம், 13வது வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற உச்சத்தைத் தொட்டு, 15வது வயதில் 79வது கிராண்ட் மாஸ்டர் எனும் மைல் கல்லை எட்டியிருக்கிறார்.

தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றிருக்கும் அவர், மென்மேலும் பல சாதனைகள் படைத்து வளர மைண்ட் வாய்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.