சொத்தை பல் பிரச்சனையா…! கவலைய விடுங்க… முதல்ல இத செய்ங்க…!

வாயில் இருக்கம் பாக்டீரியா காரணமாக உண்டாகும் பற் சொத்தை – பல் வலி பிரச்சனையை இயற்கையான வழிகளில் குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி இங்கு காணலாம். உணவு வழக்கத்தை மாற்றுங்கள்!
எடுத்துக் கொள்ளும் உணவில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் இருப்பது பற்சிதைவு மற்றும் சொத்தை பல் பிரச்சனையை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஆயில் புல்லிங்!

ஆயில் புல்லிங் எனப்படுவது எண்ணெய் கொண்டு வாயை கொப்பளிக்கம் ஒரு முறை ஆகும். வாயில் தேங்கும் கிருமிகளை அழிக்கும் இந்த ஆயில் புல்லிங் முறைக்கு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பல் துலக்குங்கள்!

வாயின் அசுத்தமான நிலையால் அதிகரிக்கும் பாக்டீரியாக்கள், பற்களை சேதப்படுத்தி பற்சிதைவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் நிலையில், இந்த ஆபத்தை தவிர்க்க தினமும் 2 முறை பல் துலக்குங்கள்.
கால்சியம் நிறைந்த உணவு! கேல், காலார்ட்ஸ், ப்ரோக்கோலி உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்ப்பது உங்கள் பற்களின் வலிமைக்கு உதவுவதோடு, பற்சொத்தை பிரச்சனை அதிகரிப்பதையும் தடுக்கிறது.

குளிர்பானங்கள் கூடாது!
கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து வழிவகுக்கும் நிலையில் இந்த குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. 

ஆரம்ப நிலையிலேயே கவனிக்கவும்!

வாயில் உள்ள பற்கள் அனைத்தையும் இந்த பற்சிதைவு தாக்குவதற்கு முன், ஆரம்ப நிலையிலேயே – அதாவது முதல் பல் பாதிப்படையும்போதே இந்த பிரச்சனையை கவனித்து தீர்வு காண்பது நல்லது!

புரோபயாடிக் உணவுகள்!

தயிர், பூண்டு, ஆப்பிள், வாழைப்பழம், ஆளிவிதை, முள்ளங்கி போன்ற புரோபயோடாக் உணவுகளை சாப்பிடுவது வாயில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டுவதோடு பிளேக், பற்சிதைவு பிரச்சனைகளை தடுக்கிறது.

தண்ணீர் பருகுங்கள்!

தண்ணீர் அதிகம் பருகுவது வாயின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் இந்த தண்ணீர் ஆனது, வாயில் சேரும் பாக்டீரியாக்களை விரட்டி பற்களின் ஆரோக்கியம் காக்க உதவுகிறது.