Ready to Launch Your Railway Dream? Apply Now (8,000+ Openings)

ரயில்வேயில் 8 ஆயிரத்திற்கும் அதிகமாக டிக்கெட் பரிசோதகர் (TTE) பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக இந்திய ரயில்வே தேர்வு வாரியம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம். மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறை நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும். லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வேயில் காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்படுகின்றன. அந்த ரயில்வே தேர்வு வாரியம் மூலாமாக இந்த பணியிடங்கள் உரிய விதிகளை பின்பற்றி நிரப்படுவது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரயில்வே பாதுகாப்பு படையில், எஸ்.ஐ மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் தற்போது சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், ரயில்களில் பலரது கனவு வேலைகளில் ஒன்றாக உள்ள டிக்கெட் பரிசோதகர் (TTE) பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், தேர்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் வரும் மேல் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. ஜூன் மாதத்திற்குள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்துவிடும் என்றும் அதன்பிறகு தேர்வு நடைமுறைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு தேர்வு தேதி எதுவும் வெளியாகவில்லை.

வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க 18 வயது முதல் 28 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் இருக்கும். அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் இருக்கும். எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதுபற்றிய அறிவிப்பை தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 27,400 – 45,600 வரை கொடுக்கப்படும். கல்வி தகுதியை பொருத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு) அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை இருக்கும். விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஒபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.500-ம், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 ம் இருக்கும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?: இந்திய ரயில்வேயின் அதிகார்ப்பூர்வ இணையதளமான indianrailways.gov.in மூலமாக விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். தேர்வுக் கட்டணமும் ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் சுய விவரங்கள், பாஸ்போர்ட் அளவு உள்ளிட்ட விவரங்கள் கோரப்படும். இவை அனைத்தையும் நிரப்பிய பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ரயில்வேயில் நடத்தப்படும் தேர்வுகள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்படும்.