இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரியல்மி 12 மற்றும் 12 ப்ரோ சீரிஸ் போன்களையே தூக்கிசாப்பிடும் விதமாக அரிசோன் கிளாஸ் டிசைனில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) போன் களமிறங்க இருக்கிறது. ஒட்டுமொத்த போர்ட்ராய்டு கேமரா பிரியர்களையும் தட்டிதூக்கும் விதமாக ரியல்மி நிறுவனம், பிரத்யேக கேமரா சிஸ்டம் கொண்ட போன்களை பட்ஜெட்டில் களமிறக்கி வருகிறது. அப்படி, ரியல்மி 12 ப்ரோ, ப்ரோ பிளஸ் போன்களும், ரியல்மி 12 மற்றும் 12 பிளஸ் போன்களும் அடுத்தடுத்து வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டன.
இப்போது, அதே பட்ஜெட்டில் கேமரா மட்டுமல்லாமல் அல்ட்ரா பிரீமியம் அரிசோன் கிளாஸ் டிசைனில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த மாடலானது, வரும் மார்ச் 19ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அந்த போனின் அம்சங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கேமரா சென்சார், கலர், ஏர் கெஸ்ச்சர், டூயல் டோன் கிளாஸ் பேனல் போன்ற அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இப்போது, பேட்டரி அம்சங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த அம்சங்களையும், ஏற்கனவே மார்கெட்டில் கசிந்த அம்சங்களையும் இப்போது பார்ப்போம்.
ரியல்மி நார்சோ 70 ப்ரோ அம்சங்கள் (Realme Narzo 70 Pro Specifications): இந்த நார்சோ மாடலில் டூயல் டோன் கிளாஸ் பேனல் (Dual-tone Glass Panel) வருகிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி பிரைமரி கேமரா வருகிறது.
ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டுள்ளது. ரியல்மியின் முந்தைய போர்ட்ராய்டு மாஸ்டர் வெர்ஷன்களை போலவே இந்த ரியல்மி நார்சோ 70 ப்ரோ போனிலும் மாஸ்டர்ஷாட் அல்கோரிதம் (Mastershot Algorithm) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, போர்ட்ராய்டு அவுட்புட் சினிமாடிக் தரத்தில் இருக்கும். ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) டிஸ்பிளே வருகிறது.
67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஏர் கெஸ்ச்சர் (Air Gesture) சப்போர்ட் வருகிறது. போனை தொடாமலேயே சில கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். இந்த அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மார்கெட் வட்டாரங்களில் பல்வேறு அம்சங்கள் கசிந்துவிட்டன.
ஆகவே, இந்த போனின் 50 எம்பி மெயின் கேமராவுக்கு அடுத்து 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த போனில் டெலிபோட்டோ இடம்பெறவில்லை. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த நார்சோவில் 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு ஓஎல்இடி (OLED) பேனல் டிஸ்பிளேவாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. 5000mAh பேட்டரி வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. இந்த போனின் எர்லி பேர்ட் சேல் அறிமுக தேதி அன்றே தொடங்குகிறது. இந்த போனின் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது.