அரசு வங்கிகளில் நிலையான வைப்புத்தொகைக்கு (FD) அதிக வட்டி இல்லை என்று மக்கள் கூறக் கேட்டிருப்போம். அரசு வங்கிகளை விட தனியார் துறை வங்கிகள் அல்லது சிறு நிதி வங்கிகள் அதிக வட்டி தருகின்றன. இப்போது அரசு வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கு கடுமையான வருமானத்தை வழங்குகின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மூத்த குடிமக்களுக்காக வி-கேர் (SBI WeCare ஸ்பெஷல் FD) என்ற சிறப்பு முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த FD திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பணத்தை நேரடியாக இரட்டிப்பாக்கலாம். கோவிட் சமயத்தில் மூத்த குடிமக்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கும், அதற்கு ஈடாக அதிக வட்டி விகிதத்துடன் அதிக வருமானத்தை அளிப்பதற்கும் WeCare FD (SBI WeCare நிலையான வைப்புத்தொகை) அறிமுகப்படுத்தப்பட்டது. மூத்த குடிமக்கள் இந்த சிறப்பு FD திட்டத்தில் 30 செப்டம்பர் 2023 வரை முதலீடு செய்ய முடியும் என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.
எஸ்பிஐ இணையதளத்தின்படி, இதில் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 7.50 சதவீத வட்டி பெறப்படுகிறது. இந்தத் திட்டத்தில், நீங்கள் நெட்பேங்கிங் அல்லது யோனோ செயலியைப் பயன்படுத்தி அல்லது கிளைக்குச் சென்று FD அக்கவுண்டை ஓபன் செய்யலாம். அதன் வட்டியை ஒவ்வொரு மாதம் / காலாண்டு / அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் பெறலாம். TDS கழித்த பிறகு FD மீதான வட்டி கிடைக்கும். வழக்கமான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் 10 ஆண்டுகள் வரையிலான தவணைகளுக்கு 3.50% முதல் 7.50% வரை இருக்கும்.
இந்த FD திட்டத்தில் உங்கள் பணம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். அதாவது ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு 10 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். 5 லட்சம் ரூபாய்க்கு, 10 ஆண்டுகளில் 5.5 லட்சம் ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். வழக்கமான FD-க்கு 10 வருடத்திற்கு 6.5 சதவிகிதம் வட்டியை இவ்வங்கி தருகிறது.
இது தவிர, அம்ரித் கலாஷ் சிறப்பு FD திட்டத்தின் காலத்தையும் SBI நீட்டித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் மற்றும் பிறருக்கு மற்ற FD-களுடன் ஒப்பிடும்போது SBI அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.