தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தொலைபேசி இணைப்பாளர் (Telephone Connector) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் நாளை (17.07.2023) வரை மட்டுமே பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
• தொலைபேசி இணைப்பாளர் (Telephone Connector) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
• இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொலைபேசி துறை அல்லது அரசு அனுமதி பெற்ற தொலைபேசி நிறுவனத்தில் பொது கல்வியில் தேர்ச்சி அல்லது தொலைபேசி இணைப்பக செயல்பாட்டிற்கான சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
• 01.07.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
• இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் OBC – 02 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
• தொலைபேசி இணைப்பாளர் பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level – 08 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
• இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (17.07.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.