சென்னை : சென்னை பெருநகர மாநகராட்சியின் சொந்த வருவாயை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் உரிமம் இல்லாமல் இயங்கிவரும் கடைகளுக்கு, மாநகராட்சியிடம் உரிமம் பெற அறிவுறுத்துவது, கடைக்காரர்களிடம் தொழில்வரி வசூலிப்பது என முடிவு செய்துள்ளது.
இதனை அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாசாலை, ரிச்சி தெருவில் சுமார் 4 ஆயிரம் கடைகள் மாநகராட்சியிடம் உரிமம் பெறாமல் இயங்கி வருவது, மாநகராட்சியின் வருவாய்த் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த 4000 கடைகளுக்கும் மாநகராட்சியிடம் உரிமம் பெற அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. போதிய கால அவகாசம் வழங்கியும் தொழில் உரிமம் பெறாமல் இருக்கும் கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.