இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பேரரசு படத்தின் காப்பிதான் என்று வலைப்பேச்சு பிஸ்மி அடித்து கூறியுள்ளார். விஜய்யை வைத்து மாஸ் ஹிட் திரைப்படத்தை கொடுத்த அட்லீ கடைசியாக பிகில் படத்தை இயக்கி இருந்தார். பிகில் படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது ஷாருக்கானின் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கியதால் படப்பிடிப்பு பாதியில் நின்றது.
அதன் பின் ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஜவான் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாக இன்னும் ஒருமாதமே இருக்கும் நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
கடந்த வாரம் ஜவான் படத்தில் நயன்தாரா நடிக்கும் கதாபாத்திரத்தின் லுக் வெளியாகி வைரலான நிலையில், நேற்று ஜவான் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் கேரக்டர் லுக் வெளியானது. மேலும் அந்த போஸ்டரில், கேப்ஷனாக மரணத்தின் வியாபாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.
‘ஜவான்’ சம்பவம் பெருசா இருக்கும் போல. கூலிங் கிளாசுடன் கெத்துக்காட்டும் விஜய்சேதுபதி!
இந்நிலையில் ஜவான் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்த வலைப் பேச்சு பிஸ்மி, ஜவான் படத்திலிருந்து வரும் அடுத்தடுத்து அப்டேடுகள் சுவாரசியமாக இருக்கும். இருந்த போதும், ஆனால், நாங்கள் ஏற்கனவே சொன்னது போல, பேரரசு திரைப்படத்தின் உல்டாதான் என்பது போலத்தான் தகவல் வந்தது. ஆனால், அண்மையில் வெளியான டிரைலரை பார்க்கும் போது அது உண்மை என்பது போலத்தான் டிரைலர் இருக்கு.
அதே நேரம் அட்லீயின் திரைக்கதை சாமார்த்தியம், மேக்கிங் ஸ்டைல் எல்லாம் அருமையாக இருக்கு. மொத்தப் படமா வரும் போது படம் எப்படி இருக்கும் என்பது தெரியவரும் என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.