உலகின் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஐஐடி நிறுவனங்கள் தான் முதன்மையான இடங்களைப் பிடித்துள்ளன. அந்த ஐஐடிகளில் பொறியியல் படித்த பலரும் இன்று உலகம் முழுக்க பெரிய நிறுவனங்களில் தலைமை பதவிகளில் இருக்கின்றனர், 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக வெயிட் பண்ணும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட தேடல்களைத் தொடங்கி இருப்பார்கள். அப்படி தங்கள் கல்லூரி படிப்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute of Technology) எனப்படும் ஐஐடியில் படிக்க விரும்பும் மாணவர்கள் அதில் எப்படி சேரலாம்? என்ன படிப்புகள் படிக்கலாம் என்று சொல்கிறோம். இந்தியாவில் மொத்தம் 23 ஐஐடி நிறுவனங்கள் உள்ளன.
IIT Kharagpur https://www.iitkgp.ac.in
IIT Bombay – https://www.iitb.ac.in
IIT Madras – https://www.iitm.ac.in
IIT Kanpur – https://www.iitk.ac.in
IIT Delhi – https://home.iitd.ac.in
IIT Guwahati – https://www.iitg.ac.in
IIT Roorkee – https://www.iitr.ac.in
IIT Ropar – https://www.iitrpr.ac.in/
IIT Bhubaneswar – https://www.iitbbs.ac.in/
IIT Gandhi Nagar – https://www.iitgn.ac.in/
IIT Hyderabad – https://www.iith.ac.in
IIT Jodhpur – https://www.iitj.ac.in/
IIT Patna – https://www.iitp.ac.in/
IIT Indore – https://www.iiti.ac.in
IIT Mandy – https://www.iitmandi.ac.in
IIT Varanasi – https://www.iitbhu.ac.in
IIT Palakkad – https://iitpkd.ac.in/
IIT Tirupati https://www.iittp.ac.in/
IIT(ISM) Dhanbad – https://www.iitism.ac.in/
IIT Bhilai – https://www.iitbhilai.ac.in/
IIT Dharwad – https://iitdh.ac.in/
IIT Jammu – https://www.iitjammu.ac.in/
IIT Goa – https://iitgoa.ac.in/
என்ன படிக்கலாம்?
விண்வெளி அறிவியல்(Aerospace) / விவசாயம் / உயிரியல் அறிவியல்( Biological Science ) / உயிரி தொழில்நுட்பம்(Biotechnolgy) / பீங்கான் தொழில்நுட்பம் (Ceramic) / இரசாயன தொழில்நுட்பம் (Chemical ) / சிவில் / கணினி அறிவியல் / எலெக்ட்ரிக்கல் / மின்சாரம் மற்றும் மின்னணுவியல் தொடர்பு(Electrical and Electronics Communication) / மின்னணுவியல்( Electronics ) / ஆற்றல் / கருவியியல் (Instrumentation) / உற்பத்தி அறிவியல்(Manufacturing Science) / மெட்டீரியல் சயின்ஸ் (Material) / உலோகவியல் / கனிமவியல்(Mining) / இயந்திரவியல் / கடல் பொறியியல் /பெட்ரோலியம் பொறியியல் / உற்பத்தி மற்றும் தொழில்துறை / கூழ் மற்றும் காகித தொழில்நுட்பம் / ஜவுளி தொழில்நுட்பம் என்று பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது.
அடிப்படைக் கல்வித் தகுதி:
12ஆம் வகுப்பில் (கணிதம், இயற்பியல், வேதியியல்) படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:
ஐஐடிகளில் சேர JEE (Joint Entrance Examination) தேர்வில் அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற வேண்டும். JEE இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, JEE மெயின் மற்றும் JEE அட்வான்ஸ்ட். இரண்டிலும் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஐஐடிகளில் சேர முடியும். அதோடு அகில இந்திய அளவில் எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் குறிப்பிட்ட சீட்கள் இந்த நிரப்பப்படும்.
என்ன ஆகலாம்?
M.Tech/MBA போன்ற உயர்கல்வி படிக்கலாம். தனியார் துறையில் வளாக பணியமர்த்தல் (PLACEMENT) வாயிலாக உடனடியாக வேலைவாய்ப்பை பெறலாம். அரசு மற்றும் பிரபல தனியார் துறைகளில் பொறியாளர், கண்காணிப்பாளர், தொழில் நுட்ப அலுவலர் போன்ற பணிவாய்ப்புகளை உடனடியாக பெறலாம். சுய தொழில் தொடங்கலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பையும் பெறலாம்.