மாரடைப்பு வருவதை 24 மணி நேரத்திற்கு முன்பே தெரியும் அறிகுறிகள்... உடனே மருத்துவரை பாருங்க..!

எங்கு பார்த்தாலும் மாரடைப்பு செய்திகள். நாம் நேற்று வரை பேசிக்கொண்டிருந்தவர், பார்த்தவர் என பலரும் திடீரென மாரடைப்பினால் இறந்துவிட்டார் என்று கேட்கும்போது நெஞ்சு பொறுக்காமல் நொறுங்கி விடுகிறோம்.
இந்த சூழலில் தான் அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று மாரடைப்பு வரும் முன் சில அறிகுறிகள் தென்படும் என்றும், அவை ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் வேறுபடும் என்றும் தெரிவித்துள்ளது.தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 3 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமான மாரடைப்பு நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அதில் சுமார் 90% விழுக்காட்டினர் இறப்பை சந்தித்தனர் என்று கூறப்படுகிறது.இதில் பலருக்கும் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி தான் காரணமாக அமைந்துள்ளது.

ஆனால், சிடார்ஸ்-சினாய் ஹெல்த் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மிட் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் மருத்துவ ஆய்வாளர்கள், திடீர் மாரடைப்பை அனுபவிக்கும் மக்களில் பாதி பேர் 24 மணி நேரத்திற்கு முன்பே அறிகுறிகளை உணர்ந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அறிகுறிகளில் வேறுபாடு இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் லான்செட் டிஜிட்டல் ஹெல்த்ரஸ்டட் இதழில் வெளியிடப்பட்டது.ஏன் திடீரென மாரடைப்பு வருகிறது?இதயம் திடீரென துடிப்பதை நிறுத்தி, ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவதைத் தடுக்கும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. திடீர் மாரடைப்புக்கு முக்கிய காரணம் அரித்மியா அல்லது அசாதாரணமாக நிகழும் இதயத் துடிப்பு ஆகும். ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தத் தூண்டும் பல்சஸ் பாதிக்கப்படும்போது அரித்மியா ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாரடைப்புக்கும் நெஞ்சு வலிக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், நெஞ்சு வலியினால் மாரடைப்பு ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.அதாவது ஒருவரது இதயதிற்கு செல்லும் ரத்தத்தில் தடை ஏற்பட்டால் நெஞ்சுவலி வரும். அதே காரணத்திற்காவோ, வேறு ஏதேனும் காரணங்களினால் இதயம் செயல்படாமல் நின்றுவிட்டாலோ அதை மாரடைப்பு என்று கூறலாம். பிற கார்டியோவேஸ்குலார் நோய், கரோனரி ஆர்டெரி நோய், கார்டியோமயோபதி மற்றும் இதய வால்வு நோய்கள் இருந்தாலும் திடீரென இதயம் செயலிழக்க வாய்ப்பிருக்கிறது. முற்றிலுமாக மாரடைப்பு ஏற்படும்போது, நோயாளிக்கு எந்த ஆபத்து சமிக்ஞையும் உடலில் இருந்து கிடைக்காமல் அப்படியே உணர்வில்லா நிலைக்கு சென்றுவிடுவார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகிறது.

மாரடைப்பின் பிற அறிகுறிகள் பின்வருமாறு:1. வேகமாக இதயம் துடிப்பது2. தலைச்சுற்றல்3. நெஞ்சு வலி4. மூச்சுத் திணறல்5. குமட்டல் அல்லது வாந்தி6. மயக்கம்மாரடைப்பை வருமுன் தெரிந்துகொள்வது எப்படி?மருத்துவர்கள் ஆணுக்கு ஒரு அறிகுறியும் பெண்ணுக்கு வேறுமாதிரி அறிகுறியும் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். இருதய மின் இயற்பியல் நிபுணரும், சிடார்ஸ்-சினாய் ஹெல்த் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மிட் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் மாரடைப்பு தடுப்பு மையத்தின் இயக்குநருமான மருத்துவர் சுமித் சக் இதுகுறித்த ஒரு தெளிவான புரிதலை முன்வைத்துள்ளார். 

இவர் தலைமையில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு மாரடைப்பு வரும் 24 மணிநேரத்திற்குள் எப்போதாவது மூச்சு விடுவதில் பிரச்னை இருக்கும் என்றும் ஆண்களுக்கு நெஞ்சு வலி அறிகுறிகள் இருக்கும் என்றும் சுமித் சக் தெரிவித்துள்ளார்.மேலும் பெண்களுக்கு ஏற்படும் அசாதரண மூச்சுத்திணறலால் மிகவும் ஆபத்தான மாரடைப்பு வரும் எனவும், இதில் ஆண்களுக்கான ஆபத்து ஒருபடி குறைவு என்றும் அவர் விளக்கியுள்ளார். எனவே, அசெளகரியங்கள் தென்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது உயிரைக் காக்கும் என அறிவுரை வழங்கியுள்ளார்.