சிம்பு மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற தொடர் வெற்றி படங்களை சிம்பு கொடுத்து வருகிறார். அடுத்ததாக கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் இப்போது தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இளம் நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் சிம்புவின் 48வது படம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாக இருக்கிறது. மேலும் மாநாடு படத்திற்கு முன்னதாக சிம்பு சற்று குண்டாக இருந்தார். ஆனால் மாநாடு படத்தில் அவரது ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்தது.
அதேபோல் வெந்து தணிந்தது காடு படத்தில் மிகவும் மெலிந்து சின்ன பையன் போல காட்சியளித்தார். இப்போது சிம்பு தனது 48வது படத்திற்கு செம ஸ்லிம்மாக மாறி உள்ளார். இந்த படத்திற்காக இப்போது லண்டன் சென்றுள்ள சிம்பு அங்கு நகரை சுற்றி உலாவி வருகிறார்.
அப்போது சிம்பு எடுத்துக்கொண்ட நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவருடைய ஸ்டைலிஷ் ஆன புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவன் மீண்டும் பழைய ஃபாமுக்கு வந்துள்ளார் என ஆர்ப்பரிக்கிறார். மேலும் விரைவில் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் சிம்புவின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இப்படத்திற்காக மார்ஷியல் கலையை சிம்பு கற்றுக் கொண்டுள்ளாரம். இந்த படம் வேற லெவலில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.