அதிக அளவு மன அழுத்தம், தூக்கத்தை இழப்பது, காலை உணவை தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அதிக கார்ப்பன் உள்ள உணவை உட்கொள்வது, மது அருந்துவது ஆகியவை உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்க கூடும்.
உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவும். ஆனால், மருந்துகள் இல்லாமல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சில வழிகளை இங்கு காண்போம்.
• தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
• தண்ணீர் அருந்துங்கள்.
• போதுமான அளவு உடலுக்குத் தூக்கம் கொடுங்கள்.
• உங்கள் உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள்.
• கார்போஹைட்ரேட் உணவுகளை தவிருங்கள்.
• குரோமியம், மெக்னீசியம் நிறைந்த உணவை உண்ணுங்கள்.
• மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும். எப்போதும் மனதை ஒருநிலைப்படுத்தி வைத்திருங்கள்.
• இரத்த சர்க்கரையை தவறாமல் கண்காணியுங்கள்.
• இலவங்கப்பட்டை மற்றும் வெந்தயம் போன்ற மசாலாப் பொருட்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் உதவும்.
• ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப் கிரீன் டீ அல்லது பிளாக் டீ உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை உடலில் மேம்படுத்தும்.
• குறைந்த கிளைசெமிக் உணவை உட்கொள்ளுங்கள்.
• துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.