சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ஜீவா ரெயில்நிலையங்களுக்கு இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26-ந்தேதி இரவு 11.10 மணிமுதல் காலை 6.40 வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள்மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மற்றும் 25-ந்தேதி மாலை4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வழியாக கொச்சுவேலி செல்லும் அதிவிரைவுரெயில் (வண்டி எண்.22645), சென்னை சென்டிரல் செல்லாமல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் வழியாக கொச்சுவேலி செல்லும். பெரம்பூரில் நின்று செல்லும்.
* ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து இன்று மற்றும் 25-ந்தேதி காலை 11.35 மணிக்குபுறப்பட்டு சென்னை சென்டிரல் வழியாக ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (13351), மறுமார்க்கமாக, ஆலப்புழாவில் இருந்து வரும் 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்குபுறப்பட்டு சென்னை சென்டிரல் வழியாக தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (13352), சென்னை சென்டிரல் செல்லாமல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் வழியாகசெல்லும். பெரம்பூரில் நின்று செல்லும்.
* கொச்சுவேலியில் இருந்து நாளை மற்றும் 28-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சென்னைசென்டிரல் வழியாக சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா செல்லும் அதிவிரைவு ரெயில் (22648), சென்னை சென்டிரல் செல்லாமல் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் வழியாககோர்பா செல்லும். பெரம்பூரில் நின்று செல்லும்.
* பாலக்காட்டில் இருந்து வருகிற 19, 26-ந்தேதிகளில் மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு சென்னைசென்டிரல் வரும் அதிவிரைவு ரெயில் (22652), திண்டுக்கல், விழுப்புரம் வழியாக சென்னைஎழும்பூர் வந்தடையும். கூடுதலாக திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் எழும்பூர் நிறுத்தம்வழங்கப்பட்டுள்ளது.
* ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 26-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல்வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (22650), சென்னை சென்டிரலுக்கு பதிலாக சென்னைகடற்கரையில் நிறுத்தப்படும்.
* பெங்களூருவில் இருந்து நாளை மற்றும் 26-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னைசென்டிரல் வரும் சென்னை அதிவிரைவு மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12658), சென்னைசென்டிரலுக்கு பதிலாக ஆவடியில் நிறுத்தப்படும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டுமைசூரு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (12007), அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்துகாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மைசூர் செல்லும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்குபுறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12675), அதற்கு மாற்றாக சென்டிரலில் இருந்துகாலை 6.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 20, 27 ஆகிய தேதிகளில் காலை 6.25 மணிக்குபுறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16057), அதற்கு மாற்றாகசென்டிரலில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.