இன்றைக்கு வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்துவருகின்றனர்.
இந்த வரிசையில் டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. முன்னதாக ஸ்பீடு 400 என்ற பைக்கை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக ஸ்கிராம்ப்ளர் 400 X என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பைக்கை விற்பனை செய்யும் விதமாக அறிமுகம் செய்துள்ளதாக டிரையம்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிய Scrambler 400X என்ற ஆப் ரோடிங் வகை பைக் ரூ. 2.63 லட்சத்திற்கு விறபனை செய்யப்படுகிறது.
இந்த புதிய மாடல் பைக்கை வாங்க வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள், நாடு முழுவதும் உள்ள ட்ரையம்ப் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பில் பைக்கை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும், அங்கு செல்ல முடியாத வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைன் பதிவு செய்துக்கொள்வதற்கான வசதிகள் உள்ளது. இந்த பைக்கின் முன்பதிவுக்கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களுடன் என்னென்ன அம்சங்கள் ஸ்கிராம்ப்ளர் 400 X ல் உள்ளது என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.
ஸ்கிராம்ப்ளர் 400 X பைக்கில் உள்ள புதிய அம்சங்கள்
டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டணியாக இணைந்து தயாரித்துள்ள ஸ்க்ராம்ப்ளர் 400 X அனைத்து வகையான நிலப்பரப்புகளும் செல்லக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பீட் 400 பைக்கில் உள்ள அதே 398.5 சிசி சிங்கள் சிலிண்டர் லீகுய்ட் கூல்டு என்ஜின் இடம் பெற்றுள்ளது. இதன் பவர் 39.5 BHP மற்றும் டார்க் 37.5 NM டார்க் திறனைக் கொண்டுள்ளது. இதனுடன் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி, ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற வசதிகள் உள்ளன.
மேலும் இந்த பைக்கில் புதிய வகை ஹெட் லைட் கிரில், ரேடியேட்டர் கார்டு, ஸ்ப்ளிட் சீட் வசதி, சம்ப் கார்டு, ஹாண்ட் கார்டு, ஹாண்டில் பார் ப்ரேஸ், உயரமான முன்பக்க மட் கார்டு போன்ற வசதிகள் உள்ளன. இதோடு எல்.இ.டி லைட்டுகள், டிராக்சன் கண்ட்ரோல், யு.எஸ்.பி, சார்ஜிங் போர்ட், ரைடு- பை- வயர், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.
ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் பல பாதுகாப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 43 mm USD போர்க், பின்பக்க உயரமான ப்ரீலோட் மோனோ ஷாக் வசதி,லான்ச் கனட்ரோல், டூயல் சேனல் ABS போன்றவை உள்ளன. டூயல் வகை டயர் , முன்பக்க 19 இன்ச் அலாய் வீல், பின்பக்க 17 இன்ச் அலாய் வீல் போன்றவை உள்ளன.