புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி செயற்கைகோள் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இஸ்ரோ, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தில் மனிதர்கள் இல்லாமல் அனுப்பும் பணியில் இறுதி கட்ட ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஒஎஸ்-08 (ESO 08) செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி-டி3 என்ற சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. அதை தொடர்ந்து செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் செயற்கைக்கோள்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் வைத்து,
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 6 மணி நேர கவுன்டவுன் இன்று அதிகாலை 3.17 மணிக்கு தொடங்கியது.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. திட்டத்ததின் முதன்மை செயற்கைக்கோளான 32 மீட்டர் உயரம், 175 கிலோ எடை கொண்ட இஓஎஸ் -08 செயற்கைகோள் ராக்கெட் ஏவப்பட்ட 13 நிமிடம் 30 விநாடிகளில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.