தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி

மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் உயர்த்தியதை அடுத்து, நான்காவது நாளாக நேற்றும் பங்குச்சந்தை எதிர்மறையாக செயல்படத் தொடங்கியது.

இதனால் 6 நாள் தொடர் ஏற்றத்துக்குப் பிறகு, சென்செக்ஸ் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் வீழ்ச்சியை சந்தித்தது.

காலையில் சென்செக்ஸ் 62626.36 புள்ளிகளுடன் தொடங்கிய வர்த்தகம் இறுதியில் சென்செக்ஸ் 215.68 புள்ளிகள் சரிந்து 62410.68 புள்ளிகளுடன் முடிவடைந்தது.

ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்), எல் அண்ட் டி, ஆக்சிஸ் பேங்க், ஐடிசி, எம் அண்ட் எம், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்லே ஆகிய 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ் இண்ட் பேங்க், சன் பார்மா, டாடா ஸ்டீல், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக், கோட்டக் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, மாருதி உள்ளிட்ட 21 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.