இந்திய பங்கு சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில் வரும் வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி, பங்கு சந்தை விடுமுறை என பலவும் வெளியாகவுள்ளன. இந்த காலகட்டத்தில் இதன் தாக்கம் என்பது பங்கு சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நிபுணர்கள் சில பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
அந்த வகையில் பரிந்துரை பட்டியலில் அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட், தி ராம்கோ சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட் பாரத் உள்ளிட்ட சிமெண்ட் துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
இது குறித்து ஷேர்கான் மற்றும் பிஎன்பி பாரிபஸ் உள்ளிட்ட தரகு நிறுவனங்கள் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர். மேற்கண்ட பங்குகளை தரகு நிறுவனங்கள் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளன.
இதில் குறிப்பாக அல்ட்ராடெக் சிமெண்ட், தி ராம்கோ சிமெண்ட்ஸ், டால்மியா பாரத் மற்றும் கிரசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகளை பரிந்துரை செய்துள்ளன.
எனினும் ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கின் மீதான தரத்தினை தரகு நிறுவனங்கள் குறைத்துள்ளன. இது அதிக மதிப்புடைய ஒன்றாக உள்ளது. இதனை ஹோல்டில் வைக்க கூறியிருந்தாலும், இதன் தரத்தினை குறைத்துள்ளது. எனினும் புதியதாக வாங்க பரிந்துரை செய்யவில்லை.
சிமெண்ட் துறையில் தேவையானது அதிகளவில் இருந்து வரும் நிலையில், இது சிமெண்ட் பங்குகளுக்கு ஆதரவாக அமையலாம்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசு உள்கட்டமைப்பு துறையில் முதலீட்டினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிமெண்ட்டின் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வீடுகளுக்கான தேவையும் அதிகரித்து வரும் சூழலில், சிமெண்ட்டின் தேவை அதிகரிக்கலாம். இது விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
ஆக தேவையானது அதிகரித்து வரும் சூழலில் இது சிமெண்ட் நிறுவனங்களின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தவிர நிலக்கரி தேவையானது அதிகரித்து வரும் சூழலில் சிமெண்ட்டின் விலையும் அதிகரிக்கலாம். ஆக இது நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இது மேற்கொண்டு இந்த நிறுவனத்தின் மார்ஜினை மேம்படுத்தலாம். இந்த போக்கானது ஜூன் காலாண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.