அமேசான் (Amazon) மிரளும்படியான பட்ஜெட்டில் வாட்டர் டிராப் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் கேமரா, 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட ஐடெல் பி40 (itel P40) போன் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.
இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பேட்டரி சிஸ்டம் வருவதால், ஆர்டர் குவிந்து வருகிறது. இந்த போனின் முழு பீச்சர்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்குகிறது. ஃபோர்ஸ் பிளாக் (Force Black), ட்ரீமி ப்ளூ (Dreamy Blue) மற்றும் லக்சூரியஸ் கோல்டு (Luxurious Gold) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
இந்த ஐடெல் பி40 போன் அறிமுகம் செய்யப்பட்ட போது, அதன் ஆரம்ப விலை ரூ.7699ஆக இருந்தது. ஆனால், இப்போது விலை குறைப்பில் வெறும் ரூ.6000 பட்ஜெட்டுக்கு வந்துள்ளது. இந்த விலைக்கு அந்த போனில் கொடுக்கப்பட்டிருக்கும் பீச்சர்கள் கட்டுப்படியாகுமா என்பதை இப்போது பார்ப்போம்.
ஐடெல் பி40 அம்சங்கள் (itel P40 Specifications): இந்த ஐடெல் போனில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு வாட்டர் டிராப் நட்ஜ் டிஸ்பிளே (Water Drop Notch Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) வருகிறது.
இந்த கம்மி பட்ஜெட்டிலும் சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் பேஸ் ஐடி அன்லாக் (Face ID Unlock) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மெமரி வருகிறது. 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது.
இந்த ஐடெல் பி40 போனில் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் (Android 12 Go Edition) கொண்ட ஆக்டா கோர் எஸ்சி9863ஏ (Octa Core SC9863A) சிப்செட் வருகிறது. ஆகவே, இந்த போனில் மீடியம் பர்ஃபாமென்ஸ் மட்டுமே எதிர்பார்க்க முடியும். கேமிங் பிரியர்களுக்கு இந்த சிப்செட் கைக்கொடுக்காது.
இந்த ஐடெல்லில் டூயல் ஏஐ கேமரா சிஸ்டம் (Dual AI Camera System) வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + விஜிஏ (VGA) கேமரா வருகிறது. லார்ஜ் டூயல் லென்ஸ் கொண்டிருப்பதால், லார்ஜ் அபெர்ச்சர் கிடைக்கும். அதேபோல 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பேட்டரி சிஸ்டம் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது.
ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் (Type-C Charging Support) வருகிறது. இந்த பேட்டரி மூலம் 15 நாட்களுக்கு ஸ்டான்ட்பை மோடில் பேக்கப் கிடைக்கும்.
மேலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஒடிஜி சப்போர்ட் (OTG Support) மற்றும் ஏஐ பவர் மாஸ்டர் (AI Power Master) கொண்டிருக்கிறது. இதுவொரு 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட போனாகும். இந்த ஐடெல் பி40 போனின் விலை ரூ.7699ஆக இருந்தது. இப்போது, அமேசானில் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.6199 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.