ஆஸ்கார் வெற்றியாளரை முடிவு செய்யும் சூர்யா வாக்கு

திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான வெற்றியாளரை முடிவு செய்யும் கமிட்டியின் உறுப்பினராக நடிகர் சூர்யா தனது வாக்கை இன்று செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் 12ம் தேதி 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த படம் உள்ளிட்ட 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. சிறந்த ஆவணப்படத்துக்கான பட்டியலில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் இடம்பிடித்துள்ளது.