தமிழக அரசு வேலை! டிப்ளமோ படித்திருந்தால் தமிழக அரசில் வேலை..! உடனே விண்ணப்பிக்கவும்..

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “பணி ஆய்வாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 12 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

பணியிடம்: தமிழகம் முழுவதும்

பதவி:

பணி ஆய்வாளர் பணியிடங்கள்: 102

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் டிப்ளமோ (சிவில்) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்ச வயது 32 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.3,700/- முதல் ரூ.1,38,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய https://tnmaws.ucanapply.com/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-03-2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.