தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்டத் துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 15,700 – 58,100
துப்புரவாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 15,700 – 58,100
தோட்டத் துப்புரவாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 4,100 – 12,500
வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600008.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.07.2024