புதுப்பொலிவுடன் தமிழக அரசின் ஸ்டார் 2.0! - பதிவுத் துறை செயலாளர் அறிவிப்பு…

ஸ்டார் 2.0 ஆனது அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் 01.01.1950 முதல் 31.12.1974 காலத்திற்குறிய வில்லங்க சான்றிதழ்களை இலவசமாக எந்த வித பணமும் செலுத்தாமல் கணிணி மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் பெற்றுக்கொள்ள ஏதுவாக 2021-2022 பட்ஜட் அறிக்கையில் தாக்கல் செய்யபட்டு அமலுக்கு வந்தது. இதில் அனைவரும் பயன் பெறலாம்.

06.02.2000 முதல் 2017 வரை ஸ்டார் திட்டம் 2018 முதல் ஸ்டார் 2.0 என பரிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் 1975 ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய அட்டவணை-II பதிவேடு கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை இணையவழியில் பார்வையிடவும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்படுகிறது.