தென்காசி மாவட்டம், மேலகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 40 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், குற்றாலம் – ஐந்தருவி சங்கராசிரமத்தின் தலைவரும், தென்காசி திருவள்ளுவா் கழகச் செயலாளருமான 92 வயதான ஆ.சிவராமகிருஷ்ணன், தமிழக அரசின் 2021ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்தவரான ஆ.சிவராமகிருஷ்ணன், 1953 முதல் 1964 வரை தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் துணைச் செயலாளராகவும், 1965ஆம் ஆண்டுமுதல் 57 ஆண்டுகளாக அதன் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.
இவரது முயற்சியால் குற்றாலம் – ஐந்தருவி சங்கராசிரமத்தின் வாயிலாக ஞானத்தாழிசை, சிவானந்த லஹரி, ஞானவிருந்து, ஐந்தருவி சித்தா் உள்ளிட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.
‘திருக்குறட் தொண்டா்’, ‘திருக்குபணிச் செம்மல்’, ‘திருக்கு பேரொளி’, ‘குபயிற்றுச் செம்மல்’, ‘தமிழ் மாமணி’, ‘இலக்கியச் செம்மல்’ என பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரரான இவருக்கு, சென்னையில் டிசம்பர் 21ந் தேதி (புதன்கிழமை) நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதினை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.