நூறு வருஷம் நோயில்லாமல் வாழ உதவும் பத்து வழிகள்!

பொதுவாக நம்மில் பலருக்கும் நூறு ஆண்டுகள் நோயின்றி வாழ ஆசை. ஆனால் என்ன செய்வது இப்போதெல்லாம் இளம்வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறோம். இன்னும் சிலர் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்தும் விடுகின்றனர். இந்த பதிவில் 100 ஆண்டு மகிழ்ச்சியாக வாழ, சிலஞானிகள் கூறும் யோசனைகள் பற்றி பார்க்கலாம் :

1. எப்போதும் அளவுக்கதிகமாய் உண்ணாமல் அளவோடு சாப்பிடல் வேண்டும்

2. எப்போதும் சோகமாயில்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்

3. எப்போதும் நம் மனசாட்சிக்கு விரோதமான செயலை செய்யவே கூடாது

4. இரவில் நீண்டநேரம் கண்விழிக்காமல் நாள்தோறும் குறித்த நேரத்தில் தூங்க வேண்டும்

5. அதிக கடன் வாங்கி அவஸ்த்தைபடாமல் கடன் வாங்காமல் வருமானத்துக்குள் வாழ வேண்டும்

6. ஊதாரித்தனமாக செலவு செய்யாமல் சம்பாதிக்கும்போதே சேமிக்க கற்றுகொள்ளணும்

7. சோம்பலை ஒழித்து எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்

8. சோம்பேறியாய் இல்லாமல் களைப்பு ஏற்படும் வரை வேலை செய்ய வேண்டும்

9. லட்சியம் இல்லாமல் வாழாமல் ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கை நடத்த வேண்டும்

10. உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளும் செயல்படும் ஒரே பயிற்சி நடைப்பயிற்சியை தினம் மேற்கொள்ள வேண்டும்.