சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு: வீடியோ வைரல்

சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர் மின் நிலையம் பயங்கர நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது. 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது.

அதனால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இந்த டீஸ்டா அணையின் சிலபகுதிகள் அடித்து செல்லப்பட்டதால், அணை செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது