ஐக்கிய அரபு நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஷார்ஜாவில் பொது போக்குவரத்திற்கு எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2027 ம் ஆண்டு துபாயில் அனைத்து டாக்சிகளும் சுற்றுசூழலுக்கு ஏற்றவகையில் மின்சார வாகனங்களாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ஷார்ஜாவில் புதிதாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய இரண்டு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் 10 எலக்ட்ரிக் டாக்ஸிகளை ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 750க்கும் மேற்பட்ட இ-வாகனங்கள் இத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் டெஸ்லா மாடல் S மற்றும் மாடல் 3 எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.