அதாவது தைப்பூச 48 நாள் விரதம். இது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி 2025 பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அன்று தைப்பூச தினத்தன்று நிறைவு பெறுகிறது.வாழ்க்கையில் செல்வம் ,வளர்ச்சி வேண்டுபவர்கள். கடன் துன்பம் நீங்க வேண்டும் என்பவர்கள். முருகனை நினைத்து இந்த விரதத்தை இருக்கலாம், என்று சொல்லப்படுகிறது. விரதத்தை தொடங்கும் நாள் அன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, என்ன வரம் வேண்டுமோ அதனை முருகனிடம் கேட்டு விரதத்தை தொடங்கலாம். விரதம் இருக்கும் நாட்களில் முருகனின் படத்திற்கு மஞ்சள் அல்லது சிவப்பு நிற பூக்களால் அலங்கரித்து, நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் பாராயணம் போன்ற பதிகங்களை விரத நாட்களில் தினமும் சொல்ல வேண்டும். 48 நாட்களில் ஏதேனும் ஒரு வேலை சாப்பிடாமல் விரதத்தை கடைபிடிக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் மூன்று வேலையும் சைவ உணவு சாப்பிடலாம். விரதத்தின் கடைசி நாளில் வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். 12 மாதங்களில் இந்த 48 நாட்களை கந்த பெருமானுக்காக ஒதுக்கி விரதம் இருந்தால், மீதமுள்ள உங்கள் வாழ்க்கையை முருகர் வழி நடத்துவார், என்று சொல்லப்படுகிறது.