தொல்காப்பியம், ஏனோ பள்ளிகளிலும், கல்லுரிகளில் விரிவாகப் போதிக்கப்படுவதில்லை அது ஒரு இலக்கண நூலாகவேபெரும்பாலோரால் கருதப்படுகிறது. உண்மையில் தொல் தமிழரின் வாழ்வியியல் செய்திகள் பல தொல்காப்பியத்தில் உள்ளது. தொல்காப்பியப் பொருளதிகாரமே தமிழரின் வாழ்க்கைநிலைகள் பற்றியும், சமுதாயம் பற்றியும் பெரும்பகுதி பேசுவதாக அமைந்துள்ளது.
தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் நூற்பாக்களை விட எண்ணிக்கையிலும் அடி அளவிலும் பொருளதிகார நூற்பாக்களே அதிகமாக அமைந்துள்ளன. அக்காலச் சமுதாயத்திற்கு தொல்காப்பியம் கொடுத்த முக்கியத்துவத்தினையும், உலக அளவில் எழுத்துக்கும், சொல்லுக்கும், யாப்பிற்கும், அணிக்கும் மட்டுமே ஏனைய மொழி நூல்கள் இலக்கணம் வகுத்திருக்கின்ற நிலையில், தனித்தன்மையுடன் பொருளதிகாரத்தின் வாயிலாக பழந்தமிழரின் சமுதாய வாழ்விற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த மொழி தமிழே என பெருமை கொள்ளச் செய்கிறது.
சிந்தனையும் அக்காலத்தில் உயர்ந்திருந்தது என்பது பெருமைகொள்ள செய்கிறது. தமிழின் தமிழரின் தொன்மைக்கு இதுவே சாட்சியம் கூறுகிறது. தமிழர் சமுதாயம் பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து அனுபவித்து அறிந்துகொண்டு பின்பற்றிய சமுதாய வாழ்க்கை முறைகளையே தொல்காப்பியம் விரிவாக எடுத்துரைக்கின்றது.
எனவே, தொல்காப்பியம் காட்டும் சமுதாயம் என்பது பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து அனுபவ முதிர்ச்சியுடைய மிகப்பழமையான தமிழர் வாழ்வின் இலக்கியங்களாக உருவெடுத்துள்ள ஒரு மரபின் கீழ்வாழ்ந்த மக்களின் நிறைவான வாழ்நிலையை பேசும் உயரிய நூல் எனலாம்.
தமிழர் வாழ்வில் தவறவிடக்கூடாத நூல் தொல்காப்பியம்.