கேஸ் சிலிண்டர் விலையை குறைக்கலாம் என்று மத்திய அரசு ஆலோசனை! இனி மக்கள் சந்தோஷத்தில் மிதக்கலாம்…

LPG கேஸ் சிலிண்டர்களை ஆன்லைன் மூலமாக புக் செய்யும்போது, ஏகப்பட்ட சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளன. LPG கேஸ் சிலிண்டர் விலை குறையபோவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. காரணம், கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. எனவே, LPG கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது..

மேலும், LPG எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலை உயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள்.
முதலில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டால், இதற்கு பிறகு, மத்திய அரசும் தன் சார்பாக அந்த விலை உயர்வை குறைக்கவே செய்யும். அதிலும், இந்த முறை நிறையவே விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காரணம், விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது. அதனால், மக்களுக்கு சில சலுகைகளை தர மத்திய அரசு திட்டம் வைத்திருக்கலாம். அல்லது, LPG சிலிண்டர் விலை குறைப்பையும் சர்ப்ரைஸாக அளிக்கலாம் என்று தெரிகிறது.

ஆக மொத்தம் விரைவில் LPG கேஸ் சிலிண்டர் விலையில் பெரும் சரிவு ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதனிடையே, ஆன்லைன் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, ஆன்லைனில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால், அதில், சில சலுகைகளையும் மக்கள் பெறுகிறார்கள். குறிப்பாக, LPG ரீஃபில்களை முன்பதிவு செய்ய பாதுகாப்பான மற்றும் வசதியான வழி இதுவேயாகும். சிலிண்டர் புக் செய்யும்போது முன்பதிவிற்கென தனியாக எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது. இதனைத் தொடர்ந்து கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாக சென்று விநியோகஸ்தரை பின்தொடர்வது போன்ற எந்தவித தொந்தரவும் இருக்காது.

கேஸ் சிலிண்டரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பதிவு செய்யலாம். அடுத்ததாக ஆன்லைன் புக் செய்து சிலிண்டர்களை பெறும்போது கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக சிலிண்டர்களை ஆன்லைன் மூலமாக வாங்கினால் பல்வேறு சலுகைகள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. டெலிவரி கண்காணிப்பு சேவை உள்ளது.