வனத்துறை கண்ட்ரோலுக்கு செல்லும் குற்றாலம்..!

பழைய குற்றால அருவியை வனத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு இடையே கடுமையாக மழை பெய்து வருகிறது. அதன்படி 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 21ஆம் தேதி வரை கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கேரளாவிற்கும் வரும் 21ஆம் தேதி வரை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. கடந்த வாரமே கடும் மழைக்கு இடையே தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ரெட் அலர்ட்டுக்கு இடையே கடந்த வாரம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் அஸ்வின் (16) பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. பழைய குற்றாலத்தில் திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. காட்டாற்று வெள்ளத்தால் அருவியில் திடீரென நீர்வரத்து அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இந்த வெள்ளத்தில்தான் சிக்கி அஸ்வின் என்ற சிறுவன் பலியானார். நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தினருடன் பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் பலியாகி உள்ளார்.
இந்த நிலையில்தான பழைய குற்றால அருவியை வனத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதன்படி தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலத்தை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உள்ளதாம்.
அதோடு இல்லாமல் மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் எடுத்தால் விதிகள் மாற்றம் அடையும்.
வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் பட்சத்தில் அங்கே எல்லோரும் எளிதாக செல்ல முடியாது. வனத்துறை அனுமதிக்கும் நேரத்தில் நாட்களில் மட்டுமே செல்ல முடியும். வனத்துறை தெரிவிக்கும் சுகாதார விதிகளை பின்பற்றி மட்டுமே உள்ளே செல்ல முடியும். வாகனங்களுக்கு, கெமிக்கல் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும்.
இதன் காரணமாக விபத்துக்கள் தடுக்கப்படும். தேவையற்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்படும். அதோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்படும். மேலும் இங்கே தூய்மை கடைபிடிக்கப்படும். இதன் மூலம் அருவியின் வனப்பு தொடர்ந்து பாதுகாக்கப்படும். இதை மனதில் வைத்து தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலத்தை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உள்ளதாம்.
ஏற்கெனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த அருவிகளும் வனத்துறை கட்டுப்பாட்டில் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.