புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்ட அரைக்காசு அம்மனின் பெயர் காரணம் சிறப்புகள், அமைந்துள்ள இடம் மற்றும் அம்மனை வழிபடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆலயம் அமைந்துள்ள பகுதி:
புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் என்ற ஊரில் திருச்சி நெடுஞ்சாலையில் கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் வரலாறு:
புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான் அரசர்கள் குலதெய்வமாக இந்த அம்பாளை வழிபட்டு வந்தனர். இந்த ஆலயம் கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு உரியதாகும். இது ஒரு குடைவரை கோவிலாகவும் போற்றப்படுகிறது. மன்னர்கள் போருக்கு செல்லும் முன் அம்பாளை வழிபட்டு விட்டு தான் செல்வார்களாம். அப்போதைய ஆட்சி காலத்தில் புழக்கத்தில் இருந்தது அரைக்காசு நாணயம், அந்த அரை காசு நாணயத்தில் பிரகதாம்பாள் உருவம் பொறித்து அனைவருக்கும் பரிசாக கொடுக்கப்பட்டது அதனால் மக்கள் அனைவரும் அதை அரைக்காசு அம்மன் என அழைத்தனர்.
ஒருமுறை புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நகை தொலைந்து போனது அப்போதைய மன்னர் அம்பாளை மனதார வழிபாடு செய்துள்ளார், நகையும் கிடைத்துவிட்டது இது அனைத்து மக்களுக்கும் சென்று பரவியது .அது மட்டுமல்லாமல் மக்கள் தொலைத்த பொருள்களுக்காக அம்மனிடம் வேண்டி நற் பலன்களையும் பெற்றனர். மன்னர்கள்காலத்தில் நவரத்தின விழா இங்கு விமர்சையாக கொண்டாடி வந்தனர். இங்கு மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.
ஆலயத்தின் சிறப்பு:
காணாமல் போன நகை ,பொருள்கள் திரும்ப கிடைக்கவும், மறந்த பொருள்களை மீட்டுக் கொடுக்கவும், காணாமல் போன நபர்களை மீட்டுக் கொடுக்கவும் மற்றும் தங்கம் கையில் சேராமல் இருப்பது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் அம்மனை நினைத்து வழிபாடு செய்தால் நிச்சயம் அந்த பொருள்கள் திரும்ப கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இருந்த இடத்திலேயே கூட நாம் அரைக்காசு அம்மனை வேண்டிக்கொண்டால் நிச்சயம் காணாமல் போன பொருள் மற்றும் கைக்கு வர வேண்டிய பணம் கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.
அரைக்காசு அம்மனை வழிபடும் முறை:
ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, வெல்லத்தில் விநாயகரை பிடித்து பானகம் கலந்து நெய்வேத்தியமாக படைத்து நாம் மனதார வேண்டிக் கொண்டு பிறகு அதை தானமாக மற்றவர்களுக்கு கொடுக்கவும். பின் அந்த காசை கோவிலில் செலுத்தி விடவும். பிரகதாம்பாள் ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் சென்னை ரத்தினமங்கலம் குபேர ஆலயத்திற்கு சென்று அம்பாளை வழிபாடு செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. சென்னை வண்டலூர் மிருக காட்சி சாலையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செல்லா காசாக திரிபவர்களையும் செல்வாக்கு பெறச் செய்யும் அரைக்காசு அம்மன் ஆலயத்திற்கு ஒரு முறையேனும் சென்று அம்மனை தரிசித்து வாருங்கள்.