துயர் துடைக்கும் பாபாவின் 'உதி' மகிமை…

பகவான் சாயிபாபாவை, இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபாவின் ‘உதி’ (விபூதி) மகிமைமிக்கது. மகோன்னதமானது. பாபா ‘உதி’ இருக்கும் வீடுகளை துஷ்ட சக்திகள் ஒருபோதும் நெருங்காது.

அக்னி குண்டம் அணையாமல் எக்காலத்திலும் எரிந்து கொண்டே இருப்பதற்காக அவ்வப்பொழுது விறகுக்கட்டைகள், மட்டையுடன் கூடிய தேங்காய்கள், கற்பூரம் போன்றவை அதில் போடப்படும்.

அவை எரிந்த பின் கிடைக்கும் சாம்பலே “உதி” என வழங்கப்படுகிறது.

உதியின் மகிமையை விளக்கிச் சொல்வது எளிதல்ல. அது மன நோயைத் தீர்க்கும் மாமருந்து. உடல் நோயைத் தீர்க்கும் உயர்ந்த மருந்து. பாம்பு தீண்டினாலும், தேள் கொட்டினாலும் கடிவாயில் வைத்தால் நஞ்சைக் கக்க வைக்கும் நல்ல மருந்து.

பெண்கள் பிரசவ வேதனையில் துடிக்கும் போது உதியை வயிற்றின் மீது தடவி விட்டு சிறிதளவு நீரில் கரைத்துக் கொடுத்தால் வேதனையே இல்லாமல் மகப்பேறு உண்டாகும்.

இந்த நோய் தீராது என்று மருத்துவர் கைவிட்ட பின்னரும் உதியை நீரில் கரைத்துக் கொடுக்க நோய் இருந்த இடம் தெரியாமல் விரைவில் பறந்து போய்விடும்.

தம்மிடம் விடைபெற்றுச் செல்வோர்க்கெல்லாம் பாபா தம் கையாலேயே உதிகொடுத்தனுப்புவார் சில சமயங்களில் பக்தர்களின் நெற்றியில் பூசி விடுவார்.

தொலை தூரத்தில் இருந்தாலும் பக்தர்கள் துன்பம் துடைக்கத் தக்க சமயத்தில் கிடைக்கும்படி உதி கொடுத்தனுப்புவார் பாபா.

சாய் பக்தர்களின் உயர்ந்த உடைமைகளில் உதிமேலான இடத்தைப் பெற்றுள்ளது. உதி இல்லாத சாய் பக்தர்களின் இல்லமே இல்லை எனலாம்.

உதியைப் பயன்படுத்தாத சாய் பக்தரே இல்லை எனலாம்.