4 வருட வாரண்டி உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்..! Moto அதிரடி..

ஒரு ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் போது “4 ஆண்டுகள்” என்கிற வார்த்தை அடிபட்டால்.. அது மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களுக்கான வாக்குறுதிக்களாக மட்டுமே இருக்கும்.
ஆனால் மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது 4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மீ, ஒன்பிளஸ, லெனோவா மற்றும் சில நிறுவனங்கள் தத்தம் ஸ்மார்ட்போன்களுக்கு 2 வருட வாரண்டியை மட்டுமே வழங்கி வருகின்றன என்பதால்.. இது 4 வருட வாராண்டி உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாகிறது!
என்ன மாடல்? 4 வருட வாராண்டி உடன் வருவது மோட்டோ எஸ்50 நியோ ஸ்மார்ட்போன் தான். இது வருகிற ஜூன் 25 ஆம் தேதி அன்று சீனாவில் நடைபெறும் நியூ ப்ராடெக்ட் லான்ச் கான்ஃப்ரென்சில் அறிமுகம் செய்யப்படவுள்ள 3 மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். அதே நாளில் மோட்டோரோலா நிறுவனம் அதன் ரேஸர் 50 (Razr 50), ரேஸர் 50 அல்ட்ரா (Razr 50 Ultra) ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யவுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், மோட்டோ எஸ்50 நியோ ஸ்மார்ட்போன் ஆனது 4 ஆண்டு கால உத்தரவாதத்தை வழங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விளம்பர போஸ்டரில், இந்த உத்தரவாதமானது ஸ்டாண்டர்ட் 1 ஆண்டு உத்தரவாதத்தையும், காம்ப்ளிமெண்ட்ரி 3 வருட எக்ஸ்டென்டட் உத்தரவாதத்தையும் உள்ளடக்கியது.
முன்னரே குறிப்பிட்டபடி, ஷாவ்மீ, ஒன்பிளஸ், லெனோவா போன்ற நிறுவனங்களின் கீழ் வெளியான சில மாடல்கள் 2 ஆண்டு உத்தரவாதங்களை வழங்கியுள்ளன. மெய்ஸூ நிறுவனத்தின் மெய்ஸூ 20 மற்றும் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 3 ஆண்டு உத்தரவாதங்களை வழங்குகின்றன. இருப்பினும், மோட்டோரோலா எஸ் 50 நியோ வழியாக 4 ஆண்டு உத்தரவாதத்துடன் ஒரு புதிய தொழில்முறை அளவுகோலை உருவாக்கியுள்ளது.
இருப்பினும் மோட்டோ எஸ்50 நியோ ஸ்மார்ட்போனிற்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பெரும்பாலும் இந்த உத்தரவாதமானது 4 வருட காலத்திற்குள் ஸ்மார்ட்போனில் எழும் சிக்கல்களை தீர்ப்பதன் மூலம் நுகர்வோர் கவலைகளை போக்குவதையே நோக்கமாக கொண்டுருக்கும். உலகளாவிய சந்தைகளில் மோட்டோ எஸ்50 நியோ ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது 4 ஆண்டு உத்தரவாதத்துடன் வருமா என்பது கேள்விக்குறி தான்!
மோட்டோ எஸ்50 நியோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு எட்ஜ் டிஸ்பிளே, அண்டர்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஒரு புதிய மிட்-ரேன்ஜ் ஸ்னாப்டிராகன் சிப்செட், 7.59 மிமீ அளவிலான ஸ்லிம் டிசைன், 5000எம்ஏஎச் பேட்டரி, 33W ரேபிட் சார்ஜிங், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 14 போன்ற்வைகளை பேக் செய்யும்.
ரேஸ்ர் 50 மற்றும் ரேஸ்ர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு வரும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலையும் கடந்த ஆண்டு வெளியான மாடல்களின் இந்திய விலையை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலக சந்தைகளில் பழைய விலை வரம்பில் தான் 2024 மாடல்களை அறிமுகம் செய்ய மோட்டோரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பார்த்தால் மோட்டோரோலா ரேஸ்ர் 50 ஸ்மார்ட்போன் ஆனது ஐரோப்பிய சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.80,460 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள மோட்டோரோலா ரேஸ்ர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.107,310 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் இந்த விலை இன்னும் குறையும். ரேஸ்ர் 40 அல்ட்ரா இந்தியாவில் ரூ.89,999 க்கும், ரேஸ்ர் 40 ரூ.59,999 க்கும் தான் அறிமுகமானது. பெரும்பாலும் ரேஸர் 50 சீரிஸும் கூட இதே போன்ற விலை வரம்பில் தான் அறிமுகமாகும்.