அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை... வெளியானது 'வேட்டையன்' டிரெய்லர்...

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. ஆக்ஷன், அதிரடி, பஞ்ச் என பட்டைய கிளப்பி இருக்கிறது டிரெய்லர்… இந்த படமானது இம்மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.