5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இனி கிடையாது... மத்திய பள்ளிக்கல்விதுறை

இது குறித்து மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது:

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த கட்டாய தேர்ச்சி முறையால், கல்வித் தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது. இந்நிலையில்,ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படி, இனி மேல் 5 மற்றும் 8ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது. அந்த வகுப்பு மாணவர்கள் ஆண்டுத்தேர்வில் தோல்வியுற்றால் 2 மாதங்களில் துணை தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். .

அப்போதும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் ஒருமுறை அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும். கற்றல் திறனை அதிகரிக்க, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த நடைமுறையானது, நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் ஆகிய 3000 மத்திய அரசு பள்ளிகளுக்கு பொருந்தும்.

இவ்வாறு சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

ஏற்கனவே 16 மாநில அரசுகள், டில்லி உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்கள் கட்டாய தேர்ச்சி முறையை கைவிட்டு விட்டன. மற்ற மாநில அரசுகள், இது பற்றி தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.